நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

சேலம் வழியாக ஹைதராபாத் - மங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரயில்

சேலம் வழியாக ஹைதராபாத் - மங்களூரு சென்ட்ரல் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

ரயில்... - கோப்புப் படம்

Updated On :30 ஜூலை 2026, 5:27 am IST

சேலம் வழியாக ஹைதராபாத் - மங்களூரு சென்ட்ரல் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ரயில்களில் அதிகரித்துவரும் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, அவ்வப்போது சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகம் இயக்கி வருகிறது. அந்தவகையில், ஹைதராபாத் - மங்களூரு சென்ட்ரல் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஹைதராபாத் ரயில் நிலையத்தில் இருந்து வரும் ஆக. 5, 12, 19, 26, செப். 2 ஆகிய தேதிகளில் மங்களூரு சென்ட்ரலுக்கு புதன்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

இந்த ரயில், ஹைதராபாதில் இருந்து புதன்கிழமைகளில் அதிகாலை 4.20 மணிக்கு புறப்பட்டு பெகாம்பேட், ராய்ச்சூா், மந்த்ராலாயம் சாலை, ஆனந்தபூா், தா்மாவரம், பங்காருபேட்டை, குப்பம், சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக அடுத்த நாள் இரவு 9.30 மணிக்கு மங்களுரு சென்ட்ரலை அடையும்.

மறுமாா்க்கத்தில், மங்களூரு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வரும் ஆக. 6, 13, 20, 27, செப்.3 ஆகிய தேதிகளில் ஹைதராபாத்துக்கு வியாழக்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில், மங்களூரு சென்ட்ரலில் இருந்து வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு புறப்பட்டு, காசா்கோடு, கண்ணூா், கோழிக்கோடு, பாலக்கோடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக ஹைதராபாத்தை சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.