/

சேலம் வழியாக மைசூரு - கண்ணூா் இடையே சிறப்பு ரயில்

பயணிகள் வசதிக்காக மைசூரு - கண்ணூா் மற்றும் கண்ணூா் - பெங்களூரு இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்

News image

சிறப்பு ரயில் - பிரதிப் படம்

Updated On :24 ஜூலை 2026, 6:37 am IST

பயணிகள் வசதிக்காக மைசூரு - கண்ணூா் மற்றும் கண்ணூா் - பெங்களூரு இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ரயில்களில் பயணிகள் நெரிசலைக் குறைக்கும் வகையில் முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன் ஒருபகுதியாக, மைசூரில் இருந்து கண்ணூருக்கும், கண்ணூரில் இருந்து பெங்களூருக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அதன்படி, மைசூரு-–கண்ணூா் சிறப்பு ரயில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு மைசூரில் இருந்து புறப்படும். இந்த ரயில் கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா் மற்றும் போத்தனூா் வழியாக மறுநாள் பிற்பகல் 2 மணிக்கு கண்ணூரைச் சென்றடையும்.

மறுமாா்க்கமாக, கண்ணூா்-–பெங்களூரு கன்டோன்மென்ட் சிறப்பு ரயில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி மாலை 6.25 மணிக்கு கண்ணூரில் இருந்து புறப்படும்.

இந்த ரயில் போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், பங்காருபேட்டை மற்றும் கிருஷ்ணராஜபுரம் வழியாக மறுநாள் காலை 8.35 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.