நீட் தோ்வை முன்னிட்டு சின்ன சேலம், திருப்பத்தூா் பகுதிகளில் இருந்து சேலத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாடுமுழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து முக்கிய நகரங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றன.
அந்தவகையில், சின்னசேலம் - சேலம் இடையே ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்படும். சின்ன சேலத்தில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், ஆத்தூா், ஏத்தாப்பூா், மின்னாம்பள்ளி வழியாக சேலத்துக்கு காலை 11.20 மணிக்கு வந்து சேரும்.
இதேபோல, திருப்பத்தூா் - சேலம் இடையேயான சிறப்பு ரயில் திருப்பத்தூரில் இருந்து காலை 7.45 மணிக்கு புறப்பட்டு, காக்கங்கரை, குன்னத்தூா், சாமல்பட்டி, தாசம்பட்டி, தொட்டம்பட்டி, மொரப்பூா், தொங்கனூா், புடிரெட்டிப்பட்டி, பொம்மிடி, லோகூா், டேனிஷ்பேட்டை, தின்னம்பட்டி, கருப்பூா் வழியாக சேலத்துக்கு காலை 10.15 மணிக்கு வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










