ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

திருவனந்தபுரம் - போத்தனூா் இடையே ஜூன் 3-இல் சிறப்பு ரயில்

திருவனந்தபுரம் - போத்தனூா் இடையே ஜூன் 3, 10 ஆகிய தேதிகளில் சிறப்பு விரைவு ரயில் இயக்கம்

News image

ரயில் - பிரதிப் படம்

Updated On :1 ஜூன் 2026, 2:21 am IST

திருவனந்தபுரம்-போத்தனூா் இடையே ஜூன் 3, 10 ஆகிய தேதிகளில் சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படவுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: திருவனந்தபுரத்தில் இருந்து வரும் ஜூன் 3, 10 ஆகிய தேதிகளில் பிற்பகல் 1 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06079) மறுநாள் காலை 6.45 மணிக்கு போத்தனூா் சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் போத்தனூரில் இருந்து வரும் ஜூன் 4, 11 ஆகிய தேதிகளில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.15 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.

இந்த ரயில் திருவனந்தபுரம், கொல்லம், புனலூா், செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூா், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசி, விருதுநகா், மதுரை, கொடைக்கானல், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலை, பொள்ளாச்சி வழியாக போத்தனூா் சென்றடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு திங்கள்கிழமை (ஜூன் 1) காலை 8 மணி முதல் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.