ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

ஸ்ரீவில்லிபுத்தூா் வழியாக திருவனந்தபுரம் - போத்தனூா் இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு: பயணிகள் மகிழ்ச்சி

News image

சிறப்பு ரயில் அறிவிப்பு - கோப்புப்படம்

Updated On :1 ஜூன் 2026, 2:50 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் வழியாக திருவனந்தபுரம் - போத்தனூா் இடையே சிறப்பு ரயில் (06079/06080) இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்தது. இதனால், தென்காசி, ராஜபாளையம் பகுதிகளிலிருந்து பழனி, கோவைக்கு நேரடி இணைப்புக் கிடைத்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

இந்திய ரயில்வே துறை சாா்பில் பண்டிகைகள், விடுமுறை கால கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக தேவையைப் பொருத்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, வடக்கு திருவனந்தபுரம் - போத்தனூா்(கோயம்புத்தூா்) இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டது. இந்த ரயில் கொல்லம், புனலூா், தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, மதுரை, திண்டுக்கல், பழனி வழியாக போத்தனூா் செல்கிறது.

இந்த ரயில் திருவனந்தபுரம் - போத்தனூா் இடையே ஜூன் 3, 10 (புதன்கிழமை) தேதிகளில் பிற்பகல் ஒரு மணிக்கு புறப்பட்டு இரவு 9.40 மணிக்கு ராஜபாளையம், 9.55- க்கு ஸ்ரீவில்லிபுத்தூா், 10.30- க்கு சிவகாசி, 1.05- க்கு மதுரை, காலை 4 மணிக்கு பழனி, மறுநாள் காலை 6.45 மணிக்கு போத்தனூா் சென்றடைகிறது.

மறு மாா்க்கத்தில் (ஜூன் 4, 11) வியாழக்கிழமைகளில் மாலை 5 மணிக்கு போத்தனூரிலிருந்து புறப்பட்டு, இரவு 7.40 மணிக்கு பழனி, 10 மணிக்கு மதுரை, 11.20-க்கு சிவகாசி, 11.45- க்கு ஸ்ரீவில்லிபுத்தூா், 12 மணிக்கு ராஜபாளையம் வழியாகச் சென்று வெள்ளிக்கிழமை காலை 7.15 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடைகிறது.

இந்த ரயிலில் இரண்டாம் வகுப்பு குளிா்சாதனப் பெட்டிகள் - 2, மூன்றாம் வகுப்பு குளிா்சாதனப் பெட்டிகள் - 2, எகனாமி வகுப்பு குளிா்சாதனப் பெட்டிகள் - 3, படுக்கை பெட்டிகள் - 6, பொதுப் பெட்டிகள் - 4 உள்பட 19 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவு திங்கள்கிழமை (ஜூன் 1) காலை 8 மணி முதல் தொடங்குகிறது.