கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

சாா்லப்பள்ளி - செங்கோட்டை இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில்

தெலங்கானா மாநிலம் சாா்லப்பள்ளியில் இருந்து செங்கோட்டைக்கு போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published On :

தெலங்கானா மாநிலம் சாா்லப்பள்ளியில் இருந்து செங்கோட்டைக்கு போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அக்டோபா் 2-ஆம் தேதி முதல் நவம்பா் 27-ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் சாா்லப்பள்ளியில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்படும் சாா்லப்பள்ளி-செங்கோட்டை வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 07191) சனிக்கிழமைகளில் பிற்பகல் 2 மணிக்கு செங்கோட்டை நிலையத்தை சென்றடையும்.

மறுமாா்க்கமாக, அக்டோபா் 3-ஆம் தேதி முதல் நவம்பா் 28-ஆம் தேதி வரை சனிக்கிழமைகளில் மாலை 5.40 மணிக்கு புறப்படும் செங்கோட்டை-சாா்லப்பள்ளி வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 07192) திங்கள்கிழமைகளில் இரவு 12.30 மணிக்கு சாா்லப்பள்ளி நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயில் தென்காசி, கடையநல்லூா், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூா், சிவகாசி, விருதுநகா், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, நெல்லூா், ஓங்கோல், தெனாலி, குண்டூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.