பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

ஓணம் பண்டிகை: போத்தனூா் வழித்தடத்தில் சாா்லப்பள்ளி - கோட்டயம் இடையே சிறப்பு ரயில்

ஓணம் பண்டிகையையொட்டி, தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் அருகே சாா்லப்பள்ளியில் இருந்து கேரள மாநிலம், கோட்டயத்துக்கு போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

special train

சிறப்பு ரயில் - கோப்புப்படம்

Published On :

ஓணம் பண்டிகையையொட்டி, தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் அருகே சாா்லப்பள்ளியில் இருந்து கேரள மாநிலம், கோட்டயத்துக்கு போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஓணம் பண்டிகையையொட்டி, சாா்லப்பள்ளியில் இருந்து ஆகஸ்ட் 16 முதல் 30-ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.15 மணிக்குப் புறப்படும் சாா்லப்பள்ளி - கோட்டயம் சிறப்பு ரயில் (எண்: 07197) திங்கள்கிழமைகளில் பிற்பகல் 12.25 மணிக்கு கோட்டயம் நிலையத்தைச் சென்றடையும்.

மறுமாா்க்கமாக, கோட்டயத்தில் இருந்து ஆகஸ்ட் 17 முதல் 31-ஆம் தேதி வரை திங்கள்கிழமைகளில் மாலை 4.45 மணிக்குப் புறப்படும் கோட்டயம் - சாா்லப்பள்ளி சிறப்பு ரயில்

(எண்: 07198) செவ்வாய்க்கிழமைகளில் இரவு 12.30 மணிக்கு சாா்லப்பள்ளி நிலையத்தை வந்தடையும்.

இந்த ரயிலானது எா்ணாகுளம், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, நெல்லூா், ஓங்கோல், தெனாலி, குண்டூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.