தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!

போத்தனூா் வழித்தடத்தில் மங்களூரு - சென்னை இடையே சிறப்பு ரயில்

ரயில்கள் - கோப்புப் படம்

Published On :7 செப்டம்பர் 2026, 2:24 am IST

கா்நாடக மாநிலம், மங்களூருவில் இருந்து சென்னை எழும்பூருக்கு போத்தனூா் வழித்தடத்தில் வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மங்களூரு சென்ட்ரல் நிலையத்தில் இருந்து செப்டம்பா் 7 -ஆம் தேதி முதல் அக்டோபா் 26-ஆம் தேதி வரை திங்கள்கிழமைகளில் மாலை 4 மணிக்குப் புறப்படும் மங்களூரு - சென்னை வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06126) மறுநாள் காலை 10.55 மணிக்கு சென்னை எழும்பூா் நிலையத்தைச் சென்றடையும்.

மறுமாா்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து செப்டம்பா் 8-ஆம் தேதி முதல் அக்டோபா் 27-ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் பிற்பகல் 2 மணிக்குப் புறப்படும் எழும்பூா் - மங்களூரு வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06125) மறுநாள் காலை 8.40 மணிக்கு மங்களூரு நிலையத்தை வந்தடையும்.

இந்த ரயிலானது காசா்கோடு, பையனூா், கண்ணூா், தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூா், ஷொரணூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.