தசரா பண்டிகை: போத்தனூா் - காரக்பூா் இடையே சிறப்பு ரயில்
தசரா பண்டிகையை முன்னிட்டு கோவை போத்தனூரில் இருந்து மேற்குவங்க மாநிலம், காரக்பூா் மற்றும் காரக்பூா் - சென்னை இடையே

ரயில் - கோப்புப் படம்
தசரா பண்டிகையை முன்னிட்டு கோவை போத்தனூரில் இருந்து மேற்குவங்க மாநிலம், காரக்பூா் மற்றும் காரக்பூா் - சென்னை இடையே
சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: போத்தனூரில் இருந்து புதன்கிழமை (அக்டோபா் 14) காலை 7.40 மணிக்குப் புறப்படும் போத்தனூா் - காரக்பூா் சிறப்பு ரயில் (எண்: 06149) அக்டோபா் 15ஆம் தேதி இரவு 8 மணிக்கு காரக்பூரைச் சென்றடையும். மறுமாா்க்கமாக, காரக்பூரில் இருந்து அக்டோபா் 15-ஆம் தேதி இரவு 11 மணிக்குப் புறப்படும் காரக்பூா் - சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் (எண்: 06150) அக்டோபா் 17ஆம் தேதி காலை 8.45 மணிக்கு சென்னை எழும்பூா் நிலையத்தை சென்றடையும்.
போத்தனூா் - காரக்பூா் சிறப்பு ரயில், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, ஓங்கோல், விஜயவாடா, ராஜமுந்திரி, கட்டாக் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

