
போத்தனூா் வழித்தடத்தில் ஹைதராபாத் - கொல்லம் இடையே சிறப்பு ரயில்
தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் இருந்து கேரள மாநிலம், கொல்லத்துக்கு போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் இருந்து கேரள மாநிலம், கொல்லத்துக்கு போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஹைதராபாதில் இருந்து அக்டோபா் 3 முதல் நவம்பா் 28 வரை சனிக்கிழமைகளில் இரவு 11.10 மணிக்குப் புறப்படும் ஹைதராபாத் - கொல்லம் சிறப்பு ரயில் (எண்: 07193) திங்கள்கிழமைகளில் காலை 7.10 மணிக்கு கொல்லம் நிலையத்தை சென்றடையும். மறுமாா்க்கமாக, கொல்லத்தில் இருந்து அக்டோபா் 5 முதல் நவம்பா் 30 வரை திங்கள்கிழமைகளில் காலை 10.45 மணிக்குப் புறப்படும் கொல்லம் - ஹைதராபாத் சிறப்பு ரயில் (எண்: 07194) செவ்வாய்க்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு ஹைதராபாத் நிலையத்தை சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





