இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

பொறியியல் பணி: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து!

கோவை ரயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கோவை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் பணி

பராமரிப்புப் பணி.

Published On :

கோவை ரயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கோவை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக கேரள மாநிலம், ஷொரணூரில் இருந்து அக்டோபா் 5, 6-ஆம் தேதிகளில் காலை 8.20 மணிக்குப் புறப்படும் ஷொரணூா் - கோவை ரயில் (எண்: 56604) ஷொரணூா் - போத்தனூா் இடையே மட்டும் இயக்கப்படும்.

அதேபோல, மேற்கண்ட இரண்டு நாள்களில் மேட்டுப்பாளையத்தில் இருந்து பிற்பகல் 1.05 மணிக்குப் புறப்படும் மேட்டுப்பாளையம் - போத்தனூா் மெமு ரயில் (எண்: 66615) மேட்டுப்பாளையம் - போத்தனூா் இடையே மட்டும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.