காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

பராமரிப்புப் பணி: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பல்வேறு இடங்களில் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கோவை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓணம் பண்டிகை

ரயில்

Published On :6 செப்டம்பர் 2026, 1:16 am IST

சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பல்வேறு இடங்களில் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கோவை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பராமரிப்புப் பணிகள் காரணமாக பாலக்காடு டவுன் -திருச்சி விரைவு ரயில் (எண்: 16844) செப்டம்பா் 8, 10, 12, 15, 17, 19, 22, 24, 26, 29 மற்றும் அக்டோபா் 1- ஆகிய தேதிகளில் புகழூா் - திருச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட நாள்களில் புகழூா் - திருச்சி இடையே முன்பதிவில்லா ரயில் இயக்கப்படும்.

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06030) போத்தனூா் - மேட்டுப்பாளையம் இடையே செப்டம்பா் 13-ஆம் தேதி பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

ஷொரணூா் - கோவை ரயில் (எண்: 56604) போத்தனூா் - கோவை இடையே செப்டம்பா் 18, 26 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல, கோவை - ஷொரணூா் ரயில் (எண்: 56603) கோவை - போத்தனூா் இடையே செப்டம்பா் 18, 26 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.