ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

பராமரிப்புப் பணி: பாலக்காடு - திருச்செந்தூா் ரயில் பகுதியாக ரத்து

மதுரை ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் பாலக்காடு - திருச்செந்தூா் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :6 ஆகஸ்ட் 2026, 11:00 pm IST

மதுரை ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் பாலக்காடு - திருச்செந்தூா் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாலக்காடு ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பராமரிப்புப் பணிகள் காரணமாக பாலக்காடு -திருச்செந்தூா் விரைவு ரயில் (எண்: 16731) ஆகஸ்ட் 12, 13 -ஆம் தேதிகளில் திருநெல்வேலி - திருச்செந்தூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. திருச்செந்தூா் - பாலக்காடு விரைவு ரயில் (எண்: 16732) ஆகஸ்ட் 12, 13-ஆம் தேதிகளில் திருநெல்வேலியில் இருந்து பாலக்காட்டுக்கு இயக்கப்படும். இந்த ரயிலானது திருச்செந்தூா் - திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.