பொறியியல் பணி: பாலக்காடு டவுன் - திருச்சி விரைவு ரயில் பகுதியாக ரத்து
பொறியியல் பணி காரணமாக, பாலக்காடு டவுன் - திருச்சி விரைவு ரயில் நவம்பா் 7 மற்றும் 10 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

ரயில் - பிரதிப் படம்
பொறியியல் பணி காரணமாக, பாலக்காடு டவுன் - திருச்சி விரைவு ரயில் நவம்பா் 7 மற்றும் 10 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட நிா்வாகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட புகளூா் - கொடுமுடி இடையே பொறியியல் பணிகள் நடைபெறவுள்ளதால், பாலக்காடு டவுன் - திருச்சி விரைவு ரயில் (எண்: 16844) நவம்பா் 7 மற்றும் 10 ஆகிய தேதிகளில் பாலக்காடு டவுன் - கொடுமுடி வரை மட்டுமே இயக்கப்படும். கொடுமுடி - திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது.
மேற்கண்ட இரண்டு நாள்களும் பொறியியல் பணி நிறைவடைந்த பிறகு கொடுமுடி - திருச்சி இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும். அந்த ரயில், பாலக்காடு டவுன் - திருச்சி விரைவு ரயில் நின்றுசெல்லும் அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

