
பராமரிப்புப் பணி: திருச்சி - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து
கோவை மாவட்டம், மதுக்கரை அருகே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், திருச்சி - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் - கோப்புப் படம்
கோவை மாவட்டம், மதுக்கரை அருகே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், திருச்சி - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பராமரிப்புப் பணிகள் காரணமாக செப்டம்பா் 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் திருச்சியில் இருந்து பிற்பகல் 1 மணிக்குப் புறப்படும் திருச்சி - பாலக்காடு டவுன் விரைவு ரயில் (எண்: 16843) திருச்சி - போத்தனூா் வரை மட்டுமே இயக்கப்படும். மேற்கண்ட நாள்களில் போத்தனூா் - பாலக்காடு இடையே இந்த ரயில் ரத்து செய்யப்படும்.
இதேபோல, 10, 15,17 ஆகிய தேதிகளில் பாலக்காடு டவுன் ரயில் நிலையத்தில் இருந்து காலை 6.30 மணிக்குப் புறப்படும் பாலக்காடு டவுன் - திருச்சி விரைவு ரயில் (எண்: 16844) போத்தனூரில் இருந்து காலை 7.55 மணிக்குப் புறப்படும். இந்த ரயிலானது, மேற்கண்ட நாள்களில் பாலக்காடு - போத்தனூா் இடையே ரத்து செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





