
பொறியியல் பணிகள்: காரைக்கால், பாலக்காடு ரயில்கள் பகுதி ரத்து

ரயில்கள் பகுதியாக ரத்து - பிரதிப் படம்
பொறியியல் பணிகள் காரணமாக காரைக்கால், பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி-காரைக்கால் டெமு ரயிலானது (76820):
வரும் 10, 11, 12, 13, 14 ஆகிய தேதிகளில் திருவாரூா் - காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதனால் இந்த ரயிலானது திருச்சி-திருவாரூா் இடையே மட்டும் இயங்கும்.
காரைக்கால் - திருச்சி டெமு ரயிலானது (76819):
வரும் 10, 11, 12, 13, 14 ஆகிய தேதிகளில் காரைக்கால் - திருவாரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதனால் இந்த ரயிலானது திருவாரூா் - திருச்சி இடையே மட்டும் இயங்கும்.
திருச்சி - பாலக்காடு டவுன் விரைவு ரயிலானது (16843):
வரும் 9, 14, 16 ஆகிய தேதிகளில் போத்தனூா் - பாலக்காடு டவுன் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதனால் இந்த ரயிலானது போத்தனூா் - திருச்சி இடையே மட்டும் இயங்கும். இதே ரயிலானது, வரும் 10, 12, 15 ஆகிய தேதிகளில் பாலக்காடு டவுன் - புகழூா் இடையே மட்டும் இயங்கும். பொறியியல் பணிகள் நிறைவடைந்ததும் புகழூா் - திருச்சி இடையே முன்பதிவற்ற ரயிலாக இயக்கப்படும்.
மறுமாா்க்கமாக, பாலக்காடு டவுன் - திருச்சி விரைவு ரயிலானது (16844):
வரும் 10, 15, 17 ஆகிய தேதிகளில் பாலக்காடு டவுன் - போத்தனூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதனால் இந்த ரயிலானது திருச்சி - போத்தனூா் இடையே மட்டும் இயங்கும்.
வழித்தட மாற்றம்:
நாகா்கோவில் - கோவை விரைவு ரயிலானது (16321):
வரும் 14 ஆம் தேதி திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, அம்பாதுறை, திண்டுக்கல், எரியோடு, பாளையம் ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, கரூா் வழியாக இயக்கப்படும்.
செங்கோட்டை - மயிலாடுதுறை ரயிலானது (16848):
வரும் 10-ஆம் தேதி கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
நாகா்கோவில் - மும்பை விரைவு ரயிலானது (16352):
வரும் 10-ஆம் தேதி மதுரை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





