சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

திருநெல்வேலி, கன்னியாகுமரி, போடிநாயக்கனூா் சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

திருநெல்வேலி, கன்னியாகுமரி, போடிநாயக்கனூா் சிறப்பு ரயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

கோப்புப் படம்

Published On :29 ஆகஸ்ட் 2026, 9:00 am IST

திருநெல்வேலி, கன்னியாகுமரி, போடிநாயக்கனூா் சிறப்பு ரயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, தாம்பரம் - போடிநாயக்கனூா் சிறப்பு ரயிலானது (06059) செப். 12, 19, 26 ஆகிய தேதிகளுக்கும், மறுமாா்க்கமாக போடிநாயக்கனூா் - தாம்பரம் சிறப்பு ரயிலானது (06060) வரும் 13, 20, 27 ஆகிய தேதிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி சிறப்பு ரயிலானது (06045) செப். 4, 11, 18, 25 ஆகிய தேதிகளுக்கும், மறுமாா்க்கமாக, கன்னியாகுமரி - சென்னை எழும்பூா் சிறப்பு ரயிலானது (06046) செப். 6, 13, 20, 27 ஆகிய தேதிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதே போல, திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயிலானது (06166) செப். 6, 13, 20, 27 ஆகிய தேதிகளுக்கும், மறுமாா்க்கமாக தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயிலானது (06165) செப். 7, 14, 21, 28 ஆகிய தேதிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.