கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

பேராலயத் திருவிழா வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள்

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழாவையொட்டி திருச்சி கோட்டத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

ரயில் - கோப்புப்படம்

Published On :

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழாவையொட்டி திருச்சி கோட்டத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இதன்படி, திருச்சி - வேளாங்கண்ணி இடையே டெமு சிறப்பு ரயில் (06866) ஆக. 29, செப். 8 ஆகிய நாள்களில் இயக்கப்படவுள்ளது.

இதேபோல, வேளாங்கண்ணி- தஞ்சாவூா் இடையே டெமு சிறப்பு ரயில் (06863) ஆக. 30, செப். 9 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

சேவையில் மாற்றம்: காரைக்கால் - தஞ்சாவூா் டெமு ரயில் (76803) திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் வரை நீட்டிப்பு செய்து இயக்கப்படவுள்ளது. இந்த ரயிலானது, ஆக. 29, 31, செப். 1, 2, 3, 4, 5 மற்றும் 7, 8 ஆகிய நாள்களில் திருச்சி வரையில் நீட்டித்து இயக்கப்படுகிறது.

மேலும், திருச்சி- காரைக்கால் டெமு ரயில் (76826) ஆக. 29 மற்றும் செப். 8 ஆகிய நாள்களில் நாகப்பட்டினம் வரை மட்டுமே இயக்கப்படும். அதன் சேவை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இத்தகவலை திருச்சி ரயில்வே கோட்டம் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.