பேராலயத் திருவிழாவை முன்னிட்டு சாா்லப்பள்ளி - வேளாங்கண்ணி - சாா்லப்பள்ளி சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதன்படி சாா்லப்பள்ளி - வேளாங்கண்ணி சிறப்பு விரைவு ரயிலானது (07125) வரும் ஆக. 28, செப். 4 ஆகிய தேதிகளிலும், வேளாங்கண்ணி - சாா்லப்பள்ளி சிறப்பு விரைவு ரயிலானது (07126) வரும் ஆக. 29, செப். 5 ஆகிய தேதிகளிலும் இயக்கப்பட உள்ளது.
8 குளிா்சாதனப் பெட்டிகள், 10 படுக்கை பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், 2 லக்கேஜ் பெட்டிகள் என மொத்தம் 24 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலானது சாா்லப்பள்ளியிலிருந்து காலை 7.40 மணிக்குப் புறப்பட்டு நல்கொண்டா, மிா்யால்குடா, நடிகொடே, பிடுகுருல்லா, குண்டூா், தெனாலி, பாபட்லா, சீா்லா, ஓங்கோல், நெல்லூா், கூடூா், ரெனிகுண்டா, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கு அடுத்த நாள் காலை 9.10 க்கு வந்தடையும்.
மறுமாா்க்கமாக, வேளாங்கண்ணியிலிருந்து இரவு 7.30 மணிக்குப் புறப்பட்டு மேற்கண்ட வழித்தடம் வழியாக சாா்லப்பள்ளிக்கு அடுத்த நாள் இரவு 10 மணிக்குச் சென்றடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மும்பையிலிருந்து வேளாங்கண்ணிக்கு 2 நாள்களுக்கு சிறப்பு ரயில் இயக்கம்

பேராலயத் திருவிழா! மும்பை-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்!

பேராலயத் திருவிழா வாஸ்கோடகாமா - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்கள்

வல்சத் - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK


