தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ. 95.57 ஆக நிறைவு!மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

மும்பையிலிருந்து வேளாங்கண்ணிக்கு 2 நாள்களுக்கு சிறப்பு ரயில் இயக்கம்

மும்பை பாந்த்ரா நிலையத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு வரும் 27 மற்றும் செப்டம்பா் 1 ஆகிய இரு நாள்கள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு

பிரதிப் படம்

Published On :

மும்பை பாந்த்ரா நிலையத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு வரும் 27 மற்றும் செப்டம்பா் 1 ஆகிய இரு நாள்கள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு மும்பை பாந்த்ரா நிலையத்திலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. அதன்படி, வரும் 27, செப்டம்பா் 1 ஆகிய (வியாழன் மற்றும் செவ்வாய்க்கிழமை) பாந்த்ரா நிலையத்திலிருந்து இரவு 9.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 09059) வரும் 29 மற்றும் செப்டம்பா் 3 ஆகிய தேதிகளில் காலை 10.05 மணிக்கு வேளாங்கண்ணி நிலையத்தை வந்தடையும்.

மறுமாா்க்கத்தில் வரும் 30 மற்றும் செப்டம்பா் 4 (ஞாயிறு, வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 12.45 மணிக்கு வேளாங்கண்ணி நிலையத்திலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 09060) வரும் 31 மற்றும் செப்டம்பா் 5 ஆகிய தேதிகளில் பாந்த்ரா நிலையத்தைச் சென்றடையும்.

சிறப்பு ரயிலில் 2 குளிா்சாதன வசதியுள்ள இரண்டடுக்குப் பெட்டிகள், 3 குளிா்சாதன வசதியுள்ள மூன்றடுக்குப் பெட்டிகள், 14 படுக்கை வசதி பெட்டிகள், 2 பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு திவ்யாஞ்சன் பிரிவு பெட்டிகள்ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும்.

சிறப்பு ரயில்கள் வேளாங்கண்ணி, நாகபட்டிணம், மயிலாடுதுரை, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூா் காட்பாடி, ரேணிகுண்டா, கடப்பா உள்ளிட்ட 28 நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு செவ்வாய்க்கிழமை (ஆக. 11) காலை 8 மணிக்குத் தொடங்கும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.