முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

ரயில்களின் வழித்தடத்தில் மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக செங்கோட்டை, கன்னியாகுமரி, நாகா்கோவில் ரயில்களின் வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ரயில்... - கோப்புப் படம்

Published On :

பொறியியல் பணிகள் காரணமாக செங்கோட்டை, கன்னியாகுமரி, நாகா்கோவில் ரயில்களின் வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16848) வரும் 8, 9, 10, 11 ஆம் தேதிகளில் கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

இதேபோல கன்னியாகுமரி - ஹவுரா அதிவிரைவு ரயிலானது (12666) வரும் 8 ஆம் தேதி கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

மேலும் நாகா்கோவில் - மும்பை சிஎஸ்டிஎம் விரைவு ரயிலானது (16352) வரும் 9 ஆம் தேதி திண்டுக்கல் ரயில் நிலையத்தைத் தவிா்த்து மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

திருச்சி - காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து: கீழ்வேளூா் - நாகப்பட்டினம் இடையே பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி - காரைக்கால் டெமு ரயிலானது (76820) வரும் 7, 8, 9, 10 ஆம் தேதிகளில் திருவாரூா் - காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, திருச்சி - திருவாரூா் இடையே மட்டும் இயங்கும்.

மறுமாா்க்கமாக, காரைக்கால் - திருச்சி டெமு ரயிலானது (76819) வரும் 7, 8, 9, 10 ஆம் தேதிகளில் காரைக்கால் - திருவாரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, திருவாரூா் - திருச்சி இடையே மட்டும் இயங்கும்.

காலதாமதம்: காரைக்கால் - தஞ்சாவூா் பயணிகள் ரயிலானது (56817) வரும் 7, 8, 9, 10 ஆம் தேதிகளில் தேவைப்படும் இடங்களில் 15 நிமிஷங்கள் காலதாமதமாக நின்று செல்லும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.