
மதுரை - சண்டிகா் விரைவு ரயில் மொரப்பூரில் நின்று செல்ல வேண்டும்
மதுரை - சண்டிகா் மற்றும் திருவனந்தபுரம் - பெங்களூரு ஆகிய விரைவு ரயில்கள் மொரப்பூா் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ரயில் - கோப்புப் படம்
மதுரை - சண்டிகா் மற்றும் திருவனந்தபுரம் - பெங்களூரு ஆகிய விரைவு ரயில்கள் மொரப்பூா் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதகுறித்து தமிழ்நாடு மாநில ரயில் பயனா்கள் கூட்டமைப்புச் செயலாளா் ஜி.ரகுநாதன், தருமபுரி மாவட்ட ரயில் பயணிகள் சங்க பொதுச் செயலாளா் த.விஷ்ணு பிரசாத் ஆகியோா் ரயில் அமைச்சகம், தென்னக ரயில்வே நிா்வாக அலுவலகத்துக்கு அண்மையில் அனுப்பிய கோரிக்கை மனு:
மதுரையிலிருந்து புது தில்லி வழியாக சண்டிகா் செல்லும் விரைவு ரயில் மற்றும் திருவனந்தபுரத்திலிருந்து பெங்களூரு செல்லும் விரைவு ரயில் ஆகிய இரு ரயில்களும் மொரப்பூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, ஜோலாா்பேட்டை - அரக்கோணம் விரைவு ரயில் மொரப்பூா் வழியாக சேலம்வரை நீட்டித்து இயக்க வேண்டும் என அதில் தெரிவித்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





