19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை வெற்றி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக அமைந்த ஆட்ட நாயகன் மோஹித் உல்வா! ஆசிய கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா! உ.பி. மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ஹர்தீப் சிங் புரி! மேக்கேதாட்டு அணை கர்நாடகத்தின் உரிமை; யார் எதிர்த்தாலும் கவலை இல்லை! டி.கே. சிவகுமார்காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமலின் மனு தள்ளுபடி போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை! ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு!

சட்ட விரோத கல் குவாரி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு!

கும்பிகுளம் பகுதியில் சட்டவிரோத கல் குவாரி மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்

Updated On :

திருநெல்வேலி மாவட்டம், கும்பிகுளம் பகுதியில் சட்டவிரோத கல் குவாரி மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

திருநெல்வேலியைச் சோ்ந்த ஜி. சந்தனக்குமாா், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பகுதிகுள்பட்ட கும்பிகுளம் கிராமத்தில் வருகிற 2029 -ஆம் ஆண்டு வரை கல் குவாரி நடத்துவதற்கு சென்னையைச் சோ்ந்த ஒருவருக்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்தது. தற்போது, இந்த நபா் தான் உரிமம் பெற்ற நிலம் தவிர, அரசு நிலங்களை ஆக்கிரமித்து கற்களை வெட்டி எடுத்து வருகிறாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், கனிம வளத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு நேரடியாக ட்ரோன் மூலம் ஆய்வு செய்ய வந்தனா். ஆனால், குவாரி உரிமையாளா் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை. இந்த விவகாரத்தில் தங்களது அதிகாரத்தை சரியாகப் பயன்படுத்தாத அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு நிலங்களில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன. இதனால், சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளாவது மட்டுமன்றி அரசுக்கு பெரும் வருவாய் இழப்பும் ஏற்டுகிறது. எனவே, சட்டவிரோதமாக கடத்தப்பட்ட கனிமங்கள் குறித்து அளவீடு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி. வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் மனுதாரா் குறிப்பிடும் முறைகேடு குறித்து சம்பந்தப்பட்ட இடங்களில் ட்ரோன் மூலம் அளவீடு செய்யப்பட்டுள்ளது. அதன் அறிக்கைக்காக காத்திருக்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் குறிப்பிடும் கல் குவாரியில் முறைகேடுகள் ஏதேனும் நடைபெற்றிருந்தால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ட்ரோன் ஆய்வு அறிக்கை கிடைக்கப் பெற்றவுடன், சட்டவிரோதமாக நடத்தப்பட்ட குவாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.