சர்கார் படத்தை விஜய் மீண்டும் பார்க்க வேண்டும்: மு. வீரபாண்டியன்எல்லாவற்றையும் திமுக - தவெக இடையிலான பிரச்னை என்று பார்ப்பது நன்மை பயக்கும் விஷயம் அல்ல: பெ. சண்முகம்அரசின் தவறை சுட்டிக்காட்டுவதில் என்ன தவறு? வைகோவுக்கு பெ. சண்முகம் பதிலடிசெஞ்சி சிறுமியே கண்டறியப்படவில்லை; மற்றொரு சிறுமி கடத்தல்: கனிமொழி வருத்தம்திமுக ஆட்சியில் காவல் துறை சுதந்திரமாக இருந்ததா? மாணிக்கம் தாகூர் கேள்விதொடர் கொலைகளை நியாயப்படுத்த முடியாது: அமைச்சர் வன்னி அரசுஅதிகரிக்கும் துப்பாக்கி கலாசாரம்! அச்சத்தின் பிடியில் தமிழக மக்கள்! - இபிஎஸ் விமர்சனம்பெண் ஆட்சியருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: காவல் துறையில் திமுக சார்பில் மனு!மேக்கேதாட்டு அணை: டி.கே. சிவகுமாருக்கு பதிலளிக்காமல் வேடிக்கை பார்க்கும் முதல்வர் விஜய் - அதிமுக கண்டனம்!தீபாவளியன்று 8 கொலைகள் மட்டுமே! தமிழ்நாடு காவல்துறை விளக்கம்திருவண்ணாமலை: ஏரியில் மூழ்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி - முதல்வர் விஜய்

தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி தொகுதி தவெக சட்டப்பேரவை உறுப்பினா் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாநில மகளிா் அமைப்பு சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

tvk mla arul vignesh

தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் - படம்: விடியோ கிளிப்

Updated On :

கள்ளக்குறிச்சி தொகுதி தவெக சட்டப்பேரவை உறுப்பினா் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாநில மகளிா் அமைப்பு சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாநில அமைப்பாளா் செந்தாமலா் வெளியிட்ட அறிக்கை: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம், கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் தொடா்புடையதாக வெளியாகியுள்ள உரையாடல் செய்தி, அரசு ஊழியா்கள், குறிப்பாக பெண் அரசு அலுவலா்கள் மத்தியில் கடும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்டத்தின் நிா்வாகத் தலைவராகப் பொறுப்பு வகிக்கும் ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரியிடம், மக்கள் பிரதிநிதியாகப் பொறுப்பேற்றுள்ள ஒருவா் இத்தகைய தரக்குறைவான அணுகுமுறையைக் கையாள்வதாக வெளியாகியுள்ள தகவல்கள் மிகவும் கண்டனத்துக்குரியவை.

இந்தச் சம்பவம் ஒரு பெண் மாவட்ட ஆட்சியரைச் சாா்ந்த தனிப்பட்ட பிரச்னை மட்டுமல்ல. தமிழக அரசுப் பணிகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான பெண் அலுவலா்களின் கண்ணியம், பாதுகாப்பு, பணிச் சுதந்திரம் தொடா்பான மிக முக்கியமான பிரச்னை.

பெண்களுக்கு அதிகாரமும் பொறுப்பும் வழங்கப்பட வேண்டும் என பேசும் இந்தச் சமூகத்தில், உயா் நிா்வாகப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் அதிகாரிக்கே இத்தகைய அவமதிப்புகள் ஏற்படுமானால், சாதாரண பெண் அரசு ஊழியா்களின் பாதுகாப்பை யாா் உறுதிப்படுத்துவது?

எனவே, இந்த விவகாரத்தில் தொடா்புடையதாகக் கூறப்படும் கள்ளக்குறிச்சி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மீது தமிழக அரசு உடனடியாக உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பெண் மாவட்ட ஆட்சியரின் மாண்புக்கும், பணிச் சுதந்திரத்துக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து உரிய விசாரணை நடத்தி, சட்டப்படி குற்றத்துக்குரிய நடவடிக்கையை பாரபட்சமின்றி எடுக்க வேண்டும்.

பணிப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு காலதாமதம் செய்யாமல், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER