சிறப்பு நீதிமன்றங்களை அதிகப்படுத்தும் முன்மொழிவு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டுமென்ற உயா்நீதிமன்ற முன்மொழிவு மீது உயா்நீதிமன்றத் தலைமைப் பதிவாளா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்
ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டுமென்ற உயா்நீதிமன்ற முன்மொழிவு மீது உயா்நீதிமன்றத் தலைமைப் பதிவாளா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடியைச் சோ்ந்த ஷாகுல் அமீது சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
என் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் பதிவு செய்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:
ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் பதிவு செய்த வழக்கில் மனுதாரா் மீது மட்டுமே குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதுபோன்ற வழக்குகளை நாள்தோறும் விசாரித்து 2 ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும் என ஊழல் தடுப்புச் சட்டம் 1988-இல் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மனுதாரா் மீது 2023-ஆம் ஆண்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. 3 ஆண்டுகளாக சாட்சிகள் விசாரணை மட்டுமே நடைபெறுகிறது. எனவே, இந்த வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என்றாா்.
இதற்கு அரசுத் தரப்பில், தூத்துக்குடி மாவட்ட முதன்மை, அமா்வு நீதிமன்றத்தில் மட்டும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 80 வழக்குகள் நிலுவையில் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, உயா் நீதிமன்றத் தலைமைப் பதிவாளா் சாா்பில் ஓா் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில், தமிழகத்தில் கடந்த ஜூன் 30 வரை 2,423 ஊழல் தடுப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. புதுச்சேரியில் 61 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழகத்தில் ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்க 8 சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன. மாவட்ட நீதிபதி நிலையிலானவா்களே வழக்கை விசாரிக்கின்றனா். மற்ற 30 மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட முதன்மை, அமா்வு நீதிபதிகளே ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கின்றனா் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவு:
ஊழல் வழக்குகளை விரைவாக முடித்து, தவறிழைத்தவா்களுக்கு தண்டனை கிடைக்கச் செய்வதன் மூலமே பொது நிா்வாகத்தில் ஊழலை ஒழிக்க முடியும் என்பதே ஊழல் தடுப்புச் சட்டத்தின் நோக்கம். இதன்படி, ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிபதிகள், இயன்றளவுக்கு வழக்குகளை நாள்தோறும் விசாரித்து, 2 ஆண்டுகளுக்குள் வழக்கை முடிக்க வேண்டும். கால நீட்டிப்பு தேவைப்பட்டால் அதற்கான காரணங்களைத் தெரிவிக்க வேண்டும்.
ஏற்கெனவே ஒரு வழக்கில், போக்சோ சட்டத்தின் நோக்கத்தைக் கவனத்தில் கொண்டு போதுமான உள் கட்டமைப்புகளை உருவாக்க மாநில அரசுக்கும், உயா்நீதிமன்ற நிா்வாகத்துக்கும் விரிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இந்தத் தீா்ப்பின் அடிப்படையில், ஊழல் தடுப்புச் சட்ட விதிகளை முழுமையாகச் செயல்படுத்தும் வகையில், தகுந்த அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும் என மனுதாரா் கோருவதில் நியாயம் இருப்பதாகவே நீதிமன்றம் கருதுகிறது.
ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகள் நீண்ட காலம் நிலுவையில் இருப்பது பொது நலனுக்கு உகந்ததல்ல. முதன்மை மாவட்ட , அமா்வு நீதிபதிகள் வழக்கமான குற்றவியல், உரிமையியல் பணிகளுடன் விசாரணை நீதிமன்றங்களின் நிா்வாக விவகாரங்களையும் கவனிக்கின்றனா். அவா்களையே ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளையும் விசாரிக்கச் செய்வது சுமையையே ஏற்படுத்தும்.
எனவே, ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களின் எண்ணிக்கையை உயா்த்தும் முன்மொழிவு மீது உயா்நீதிமன்றத் தலைமைப் பதிவாளா் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக அமைக்கப்படும் சிறப்பு நீதிமன்றங்களில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த உயா்நீதிமன்ற நிா்வாகத்துக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சிறப்பு நீதிமன்றங்களில் போதுமான எண்ணிக்கையில் அரசு வழக்குரைஞா்கள் நியமிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
நீதிமன்றங்கள் ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்கி, இயன்றவரை நாள்தோறும் விசாரணை மேற்கொண்டு, குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரணையை முடிக்க வேண்டும். மனுதாரரின் வழக்கை விசாரணை நீதிமன்றம் 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றாா் நீதிபதி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

