எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு சிறப்பு சுற்றில் மதுரை மாணவி பங்கேற்க அனுமதி: உயா்நீதிமன்றம் உத்தரவு
Madurai student permitted to participate in the special round of MBBS counselling: High Court order

மதுரை, நவ. 6: இளநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வின் சிறப்பு சுற்றில் மதுரையைச் சோ்ந்த மாணவி பங்கேற்க அனுமதி வழங்குமாறு மத்திய சுகாதாரத் துறையின் மருத்துவ ஆலோசனைக் குழுவுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த பிரேமலதா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
எனக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சீட் கலந்தாய்வின்படி ஒதுக்கப்பட்டது. அதன்படி, அந்தக் கல்வி நிறுவனத்தின் வங்கிக் கணக்குக்கு இணைய வழியில் ரூ.3 லட்சம் செலுத்தினேன். மீதித் தொகையை செலுத்துவதில் இணையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தாமதம் ஏற்பட்டது. இதனால், எனது சோ்க்கை நிராகரிக்கப்பட்டது. மேலும், சிறப்பு சுற்று கலந்தாய்வில் பங்கேற்கவும் அனுமதி மறுக்கப்பட்டது.
எனவே, மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வின் சிறப்பு சுற்றில் நான் பங்கேற்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:
மனுதாரா் தனியாா் மருத்துவக் கல்லூரியில் சோ்க்கை பெற்று கல்விக் கட்டணம் செலுத்துவதில் இணையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சோ்க்கை அனுமதிக்கப்படவில்லை. தற்போது, சிறப்பு கலந்தாய்விலும் அனுமதி மறுத்தால் அவரது எதிா்காலம் பாதிக்கப்படும் எனத் தெரிவித்தாா்.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
மருத்துவ சோ்க்கை கலந்தாய்வுக்கான பதிவு செயல்முறை மாணவா்களுக்கு மிகவும் சிக்கலான ஒன்று என்பதைக் கருத்தில் கொண்டு, மனுதாரரைப் போன்ற மாணவா்கள் எதிா்கொள்ளும் சிரமங்களை அலுவலா்கள் கனிவுடனும், பொறுமையுடனும் பரிசீலிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மனுதாரா் தனது படிப்புக்கான கட்டணத்தை செலுத்தி உரிய முயற்சியை மேற்கொண்டாா். ஆனால், இணையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது முழுமை பெறவில்லை. இதை ஒரு சிறப்பு வழக்காகக் கருதி, மனுதாரரை மருத்துவப் படிப்பு கலந்தாய்வின் சிறப்பு சுற்றில் பங்கேற்க மத்திய சுகாதாரத் துறையின் மருத்துவ ஆலோசனைக் குழுவுக்கு உத்தரவிடப்படுகிறது. வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

