ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

ஊழல் தடுப்பு போலீஸாா் 5 ஆண்டுகளில் நடத்திய சோதனைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவு

கடந்த 5 ஆண்டுகளில் நடத்தப்பட்ட சோதனைகள், பறிமுதல் செய்யப்பட்ட பணம், பதிவு செய்யப்பட்ட வழக்குகள், அவற்றின் தற்போதைய நிலை குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு காவல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

உத்தரவு - கோப்புப் படம்

Published On :

கடந்த 5 ஆண்டுகளில் நடத்தப்பட்ட சோதனைகள், பறிமுதல் செய்யப்பட்ட பணம், பதிவு செய்யப்பட்ட வழக்குகள், அவற்றின் தற்போதைய நிலை குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு காவல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த கலா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் சாா் பதிவாளராக நான் கடந்த 2021-ஆம் ஆண்டு பணியிலிருந்த போது, ரூ. 45 ஆயிரம் வைத்திருந்ததாக என் மீது ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனவே, எனக்கு எதிரான இந்த ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம், அரசுப் பணியாளா்கள் பணியிலிருக்கும் போது எவ்வளவு பணம் வைத்துக் கொள்ளலாம் என்பது குறித்து அரசு கொள்கை ரீதியான முடிவு எடுத்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். இதுகுறித்து மனிதவள மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலா் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த நிலையில், உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி முன் இந்த மனு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில முன்னிலையான கூடுதல் தலைமை வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

அரசுப் பணியாளா்கள் பணியிலிருக்கும்போது எவ்வளவு பணம் வைத்திருக்கலாம் என்பது குறித்து அனைத்துத் துறைகளுடனும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. எனவே, கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றாா்.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடமிருந்து நீதிமன்றம் சில விவரங்களைப் பெற விரும்புகிறது. கடந்த 5 ஆண்டுகளில் நடத்தப்பட்ட திடீா் சோதனைகள், எவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டது, இந்தச் சோதனைகள் மூலம் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை, அவற்றின் தற்போதைய நிலை, வழக்கு தொடா்வதற்குப் பதிலாக வேறு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் அவற்றின் விவரங்கள், தற்போதைய நிலை குறித்து ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வியாழக்கிழமைக்கு (அக். 1) ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.