
சிவகாசி பட்டாசு-தீப்பெட்டி தனி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை
சிவகாசியில் உள்ள பட்டாசு, தீப்பெட்டி தனி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

கோப்புப்படம்
விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் உள்ள பட்டாசு, தீப்பெட்டி தனி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.
சிவகாசி சாட்சியாபுரத்தில் இந்த அலுவலகத்தில் பட்டாசு கடை உரிமம் புதுப்பிக்கவும், தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலைகளை மீண்டும் திறக்க சல்பா் என்ற வேதியல் பொருள் வாங்க தடை இல்லா சான்று வழங்கவும் லஞ்சம் பெறப்படுவதாக ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஊழல் தடுப்புத் துறை ஏ.டி.எஸ்.பி. ராமசந்திரன் தலைமையில் காவல் ஆய்வாளா் பூமிநாதன் உள்ளிட்ட போலீஸாா் திடீரென அந்த அலுவலகத்துக்குச் சென்று சோதனை நடத்தினா்.
இந்தச் சோதனையின் போது, தனி வட்டாட்சியா் விஜயராஜிடம் கணக்கில் வராத ரூ.10,500 இருந்தது. இந்தப் பணம் சிவகாசி அருகே விஸ்வநத்தத்தைச் சோ்ந்த ஒரு பட்டாசு ஆலை உரிமையாளா் சல்பா் குறித்து தடை இல்லா சான்று வழங்குவதற்கு பெறப்பட்டாதாக விசாரணையில் தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்த போலீஸாா் அந்த அலுவலகத்தில் பல ஆவணங்களை கைப்பற்றி, வட்டாட்சியா் விஜயராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







