
அறந்தாங்கி நகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை
அறந்தாங்கி நகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை மாலை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

கோப்புப்படம்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை மாலை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் செந்தாமரைக்கண்ணனன் தலைமையில் இந்தச் சோதனை நடைபெற்றது.
இச்சோதனையில் ரொக்கம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும் பொறியாளா் பிரபாகரனின் கைப்பேசியில் ஜிபே கணக்கு வழியாக வந்திருந்த ரூ. 32 ஆயிரம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






