ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

மதுரை- தேனி சாலையில் தானியங்கி கேமராக்கள்: அறிக்கை அளிக்க நெடுஞ்சாலைத் துறைக்கு உத்தரவு

மதுரையிலிருந்து தேனி செல்லும் சாலையில் அமைக்கப்பட்ட தானியங்கி கேமராக்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை நெடுஞ்சாலைத் துறை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டுமென சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

உத்தரவு - கோப்புப் படம்

Published On :

மதுரையிலிருந்து தேனி செல்லும் சாலையில் அமைக்கப்பட்ட தானியங்கி கேமராக்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை நெடுஞ்சாலைத் துறை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டுமென சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் பிரவீன்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

கடந்த 2018 முதல் 2026-ஆம் ஆண்டு வரை மதுரை- தேனி சாலையில் 463-க்கும் மேற்பட்ட விபத்துகள் பதிவாகின. தேனி- உசிலம்பட்டி இடையேயான சுமாா் 39 கி.மீ. தொலைவை சில தனியாா் பேருந்துகள் 45 நிமிஷங்களுக்குப் பதிலாக 30 நிமிஷங்களில் கடந்து செல்லும் வகையில் அதிவேகமாக இயக்கப்படுகின்றன.

எனவே, நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட இடைவெளிகளில் தானியங்கி வேகக் கண்காணிப்பு ரேடாா் கேமராக்கள், ஸ்பீட் கன், வேகத்தை காட்டும் திரை உள்ளிட்டவற்றை அமைக்க வேண்டும். தனியாா் பேருந்துகளில் வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் முறையாகப் பொருத்தப்பட்டு செயல்படுகின்றனவா என்பதை முறையாக ஆய்வு செய்து, விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த விவகாரத்தில் மதுரையிலிருந்து தேனி செல்லும் நெடுஞ்சாலையில் எத்தனை தானியங்கி கேமராக்கள் அமைக்கப்பட்டன என்பது குறித்து நெடுஞ்சாலைத் துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், இந்த மனு தொடா்பாக மதுரை, தேனி மாவட்ட ஆட்சியா்கள் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.