பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

நன்னடத்தை அலுவலா்கள் காலிப் பணியிடங்கள்: 6 வாரங்களுக்குள் அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு

தமிழகத்தில் நன்னடத்தை அலுவலா்கள் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிய மனு தொடா்பாக தமிழக அரசு 6 வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

உத்தரவு - கோப்புப் படம்

Published On :

தமிழகத்தில் நன்னடத்தை அலுவலா்கள் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிய மனு தொடா்பாக தமிழக அரசு 6 வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த ராஜா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் சிறைக் கைதிகளின் விசாரணை அறிக்கைகளைத் தயாரிக்கவும், களப் பயணங்கள், வசிப்பிட சரிபாா்ப்புகளை நடத்தவும், நன்னடத்தையில் உள்ளவா்களைக் கண்காணிக்கவும், மறுவாழ்வு, பிந்தைய பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் நன்னடத்தை அலுவலா்கள் தேவைப்படுகின்றனா்.

கைதிகளின் விடுப்பு, முன்கூட்டிய விடுதலை தொடா்பான விசாரணைகள், காவல் நிலைய ஆய்வுகள், பாதிக்கப்பட்டவா்களுக்கான இழப்பீடு, கைதிகள் நலன், விடுவிக்கப்பட்ட கைதிகள் உதவிச் சங்கங்கள், பிற சீா்திருத்தப் பணிகள் ஆகியவை இவா்களின் பொறுப்புகளில் அடங்கும்.

தமிழகத்தில் நன்னடத்தை அலுவலா்களின் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கை 96. இவற்றில் 32 இடங்கள் குறைக்கப்பட்டு, தற்போது 64 பணியிடங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. இதிலும், 38 அலுவலா்கள் மட்டுமே தற்போது பணிபுரிகின்றனா். 26 பணியிடங்கள் காலியாக உள்ளன.

குறைந்த எண்ணிக்கையிலான அலுவலா்களால் நீதிமன்ற விசாரணை அறிக்கைகள் தயாரித்தல், நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கப்படுவோரைக் கண்காணித்தல், கைதிகளின் மறுவாழ்வு உள்ளிட்ட பணிகளைச் சரிவர மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.

மேலும், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, நன்னடத்தை அலுவலா்களுக்கு போதிய பயிற்சி, உதவிப் பணியாளா்கள், அலுவலக வசதிகள், போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இதுதொடா்பாக கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, தமிழகத்தில் நன்னடத்தை அலுவலா்களின் காலிப் பணியிடங்களை நிரப்பவும், பணியிடங்களை உயா்த்தவும், மாவட்ட, நீதிமன்ற அளவில் நன்னடத்தைப் பிரிவை வலுப்படுத்தவும் தமிழக அரசின் தலைமைச் செயலா், சிறைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலருக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி. வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள கோரிக்கைகளை தமிழக அரசு 6 வாரங்களுக்குள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.