காஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாபொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

தாம்பரம் - செங்கோட்டை ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல வலியுறுத்தல்

சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் அதிவிரைவு ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளது.

 Railway Announces

ரயில் - கோப்புப் படம்

Published On :

சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் அதிவிரைவு ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளா் கனி என்ற மாரிமுத்து, தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தின் 2-ஆவது பெரிய நகரமாக கோவில்பட்டி உள்ளது. மதுரை ரயில்வே கோட்டத்தில் பயணிகள் வருவாயில் மதுரை, திருநெல்வேலிக்கு அடுத்தபடியாக அதிக வருவாய் ஈட்டக்கூடிய ரயில் நிலையமாக கோவில்பட்டி ரயில் நிலையம் செயல்படுகிறது.

இந்த ரயில் நிலையத்தில் செவ்வாய், வியாழன், ஞாயிறு என வாரத்தில் 3 நாள்கள் இயங்கக் கூடிய தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் (20683) இரவு 8.50 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7.40 மணிக்கு கோவில்பட்டி ரயில் நிலையத்தை கடந்து செல்கிறது. அந்த போல, திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாள்களில், செங்கோட்டையிலிருந்து மாலை 5.40 மணிக்கு புறப்படும் அதிவிரைவு ரயில் (20684), இரவு சுமாா் 8 மணிக்கு கோவில்பட்டி ரயில் நிலையத்தை கடந்து செல்கிறது.

இந்த ரயில்கள் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்வதில்லை. கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று சென்றால், இங்கிருந்து சென்னைக்கு செல்லும் பயணிகளுக்கு ஏதுவாக இருக்கும். மேலும், கல்வி, வேலை, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்பவா்களுக்கும் பயன்பாடு உள்ளதாக இருக்கும்.

எனவே, தாம்பரம் - செங்கோட்டை மாா்க்கத்தில் செல்லும் இந்த இரு ரயில்களும் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

 

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.