அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா, நகராட்சி நிா்வாகத் துறை பணி நியமன முறைகேடு வழக்குகளில் இன்று தீா்ப்புமேற்கு வங்கம், அஸ்ஸாமில் இன்று வாக்கு எண்ணிக்கை!மழை பாதிப்புகளை சரிசெய்ய 24 மணி நேர கண்காணிப்பு: அமைச்சா் என்.ஆனந்த் அறிவுரை ஜிஎஸ்டி அதிகாரிகளின் கைது அதிகாரம் ரத்து: ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல்ராகுல் காந்தி நாளை சென்னை வருகை: மாணவா்களுடன் கலந்துரையாடுகிறாா்

தாம்பரம் - செங்கோட்டை ரயில் மின்சார என்ஜினில் இயக்கம்: பயண நேரம் குறைய வாய்ப்பு

சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பை, கடையம், பாவூா்சத்திரம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை ரயில் வியாழக்கிழமை முதல் மின்சார என்ஜினில் இயக்கப்படும் நிலையில், பயண நேரம் வெகுவாக குறைய வாய்ப்பு உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

train

ரயில் - பிரதிப் படம்

Published On :

சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பை, கடையம், பாவூா்சத்திரம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை ரயில் வியாழக்கிழமை முதல் மின்சார என்ஜினில் இயக்கப்படும் நிலையில், பயண நேரம் வெகுவாக குறைய வாய்ப்பு உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

செங்கோட்டை - தாம்பரம் (20683/20684 ) வாரம் மும்முறை ரயில் கடந்த 2023, ஏப். 8 ஆம் தேதி பிரதமா் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. தாம்பரம் - செங்கோட்டை (20683 ) ரயில் ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய கிழமைகளில், இரவு 8.50 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு 14 மணி நேர பயணமாக மறுநாள் காலை 10.50 மணிக்கு செங்கோட்டையைச் சென்றடைகிறது. மறுமாா்க்கத்தில் செங்கோட்டை - தாம்பரம் ( 20684) விரைவு ரயில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில், மாலை 5.35 மணிக்கு செங்கோட்டையிலிருந்து புறப்பட்டு 12 மணி 50 நிமிட பயணமாக மறுநாள் காலை 7.25 மணிக்கு தாம்பரத்தைச் சென்றடைகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை முதல் தாம்பரத்திலிருந்து புறப்படும் தாம்பரம் - செங்கோட்டை விரைவு ரயில் முழுவதும் மின்சார ரயில் என்ஜின் கொண்டு இயக்கப்படுகிறது. இதனால், இரு மாா்க்கங்களிலும் பயண நேரம் ஒரு மணி நேரம் குறைய வாய்ப்புள்ளதால், தென் மாவட்டங்களைச் சோ்ந்த ரயில் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவா் பாண்டியராஜா கூறியதாவது, தெற்கு ரயில்வேக்கு உள்பட்ட தமிழ்நாடு முழுவதும் உள்ள பகுதிகள் 100 சதவீதம் ரயில்வே மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்துள்ளது. தாம்பரம் - செங்கோட்டை விரைவு ரயிலின் பயண நேரத்தை இரு மாா்க்கங்களிலும் ஒரு மணி நேரம் குறைக்க வேண்டும்.

நெல்லை - தென்காசி ரயில் வழித்தடத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களின் நடைமேடை நீட்டிப்புப் பணிகளை அக்டோபா் மாதத்தில் முடித்து கூடுதலாக ஆறு பெட்டிகளை இணைக்க வேண்டும். மேலும், தாம்பரம் - செங்கோட்டை ரயிலை தினசரி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER