பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

8 மணி நேரம் ரயில் தாமதம்! பயணிக்கு ரூ. 35,000 வழங்க ரயில்வே-க்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவு!

ரயில் தாமதமானதால் பயணிக்கு ரூ. 35,000 இழப்பீடு வழங்க ரயில்வே துறைக்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது பற்றி...

train

கோப்புப் படம்

Published On :

ரயில் 8 மணி நேரம் தாமதமானதால் மன உளைச்சலுக்கு ஆளானதாக பயணி ஒருவர் புகார் தெரிவித்த வழக்கில், ரூ. 35,000 இழப்பீடாக வழங்க ரயில்வே துறைக்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் குமார் என்பவர் கடந்த 2024 செப்டம்பர் 23 ஆம் தேதி டாட்டா நகரிலிருந்து சம்பல்பூருக்குச் செல்ல 'இஸ்பாட் எக்ஸ்பிரஸ்' (Ispat Express) ரயிலில் இரண்டு ஸ்லீப்பர் வகுப்பு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்தார்.

அந்த ரயில் காலை 10.18 மணிக்கு டாட்டா நகரிலிருந்து புறப்பட்டு பிற்பகல் 3.50 மணிக்கு சம்பல்பூரைச் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ரயில் தாமதமாகப் புறப்பட்டு, திட்டமிடப்பட்ட நேரத்தைவிட 8 மணி நேரம் 48 நிமிடங்கள் தாமதமாக சம்பல்பூரைச் சென்றடைந்தது. இந்தத் தாமதத்தால் ஏற்பட்ட உடல்ரீதியான, மனரீதியான, நிதிசார்ந்து கடினமான உளைச்சலுக்கு ஆளானதாக ரூ. 4.5 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி நுகர்வோர் ஆணையத்திடம் சஞ்சய் குமார் முறையிட்டார்.

இந்த வழக்கில் சஞ்சய் குமாருக்கு, துன்புறுத்தலுக்கான இழப்பீடாக ரூ. 30,000, வழக்குச் செலவுகளுக்காக ரூ. 5,000 என ரூ. 35,000 தொகையை ரயில்வே செலுத்த வேண்டும் என்று நுகர்வோர் ஆணையம் கடந்த செப். 2 அன்று உத்தரவிட்டது. இந்தத் தொகையை 45 நாள்களுக்குள் செலுத்தவில்லை என்றால், பணம் செலுத்தப்படும் நாள் வரை ஆண்டுக்கு 12 சதவீத வட்டியுடன் அத்தொகையைச் செலுத்த வேண்டும் என்றும் ஆணையம் உத்தரவிட்டது.

"பயணிகளின் நேரம் மதிப்புமிக்கது, ரயில் தாமதங்களுக்கான காரணங்களையும், அவை தங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை என்பதையும் ரயில்வே நிர்வாகம் விளக்க வேண்டும். அது நிரூபிக்கப்படாத வரை, ஒவ்வொரு பயணியின் நேரமும் விலைமதிப்பற்றது என்பதை மறுக்க முடியாது" என்றும் ஆணையம் கூறியுள்ளது.

Summary

Railways ordered to pay Rs 35,000 to passenger as train delayed by more than 8 hours

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER