
அரசாணையை மறுபரிசீலனை செய்யும் உரிமையும் முதல்வருக்கு இருக்கிறது! ராஜ்மோகன்
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கவுள்ளது தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி...

அமைச்சர் ராஜ்மோகன் - கோப்புப் படம் | DIPR
மக்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளித்து அரசாணையை மறுபரிசீலனை செய்யும் உரிமையும் முதல்வருக்கு இருக்கிறது என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"எங்கள் கூட்டணி உறுதியாக இருக்கிறது, இது ஜனநாயக கூட்டணி, அதில் ஜனநாயகம் என்னவென்றால் எங்கள் மீது பெ. சண்முகம் என்ன விமர்சனம் வேண்டுமானாலும் வைக்கலாம். அது அவர்களின் உரிமை.
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக, முதல்வருக்குத் தெரியாமல் அரசாணை வருகிறதா? என்று அவர் கேட்பதன் நோக்கம், 'தலைமைச் செயலகம் வேண்டும் என்று சேர்ந்துதானே முடிவெடுத்தீர்கள்?' என்று பெ. சண்முகம் கேட்கிறார்.
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக, தொடர்ச்சியாக சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் மக்களும் அங்குள்ள மீனவர்களும் கருத்து தெரிவித்து வருவதால் அவர்களுடைய கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளித்து அந்த அரசாணையை மறுபரிசீலனை செய்யும் உரிமையும் முதல்வருக்கு இருக்கிறது. பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.
கடற்கரையில் பேனா சிலையை வைத்தே தீருவேன் என்று அடம்பிடிக்கும் ஆட்சியாளர்கள் நாங்கள் இல்லை. அனைவரின் கருத்துகளுக்கு செவிகொடுக்கும் ஆட்சியாளர்கள்.
கம்யூனிஸ்ட் கட்சியினர் தனியாக போட்டியிடுகிறார்கள். அவர்களுக்கும் வாழ்த்துகள்" என்று கூறினார்.
Summary
CM also has the right to review the Government Order: Rajmohan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





