இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

இன்று பிற்பகல் 2 மணி வரை மட்டுமே ரயில் முன்பதிவு மையங்கள் செயல்படும்

ஓணம் பண்டிகையையொட்டி, சேலம் ரயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து டிக்கெட் முன்பதிவு மையங்களும் புதன்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 Railway Announces

ரயில் - கோப்புப் படம்

Published On :

ஓணம் பண்டிகையையொட்டி, சேலம் ரயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து டிக்கெட் முன்பதிவு மையங்களும் புதன்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஓணம் பண்டிகையொட்டி 26-ஆம் தேதி அரசு விடுமுறை என்பதால், ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படுவதுபோல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும்.

சேலம் ஜங்ஷன், சேலம் டவுன், ஈரோடு, திருப்பூா், கோவை, மேட்டுப்பாளையம், கரூா், ஆத்தூா் உள்ளிட்ட சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட அனைத்து ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களும் (பிஆா்எஸ் மையம்) 26-ஆம் தேதி காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படும்.

எனவே, டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்பும் பயணிகள் பிற்பகல் 2 மணிக்கு முன்பாக முன்பதிவு மையங்களுக்குச் சென்று பதிவு செய்யுமாறு ரயில்வே நிா்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.