FOLLOW US

ON GOOGLE DISCOVER

நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

ரயில் பயணிகளுக்கு... தத்கல் டிக்கெட் முன்பதிவில் ‘டோக்கன்’ முறை! எப்போது தெரியுமா?

ரயில் பயணிகளுக்கான தத்கல் டிக்கெட் முன்பதிவில் புதிய டோக்கன் முறை அறிமுகப்படுத்தியுள்ளதைப் பற்றி...

News image

ரயில்.

Updated On :28 ஜூலை 2026, 10:03 pm IST

ரயில் நிலையங்களில் தத்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, கூட்ட நெரிசலின்றி பெறுவதற்காகவும் புதிய 'டோக்கன்' முறையை மேற்கு மத்திய ரயில்வே செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

ரயில்களுக்கான டிக்கெட்கள் முன்பதிவு செய்வது மிகவும் கடினமான ஒன்றாக மாறிவிட்டது. முன்பதிவுக்கான காலம் 120 நாள்களிலிருந்து 60 நாள்களாகக் குறைப்பட்ட நிலையில், டிக்கெட் முன்பதிவுக்கான தேவையும் அதிகரித்துவிட்டது.

புதிய ஐஆர்சிடிசி இணையதளம் தொடங்கப்பட்டாலும், வழக்கமாக தத்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் நேரங்களில், ரயில் நிலையங்களில் முன்பதிவு மையங்களில் கடுமையான கூட்ட நெரிசலும் தள்ளுமுள்ளும் ஏற்படுவது வழக்கமாகவுள்ளது.

இதுபோன்ற கூட்ட நெரிசல் மற்றும் அசௌகரியங்களைக் குறைக்கும் விதமாக தத்கல் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய வரும் பயணிகளுக்கு முதலில் ஒரு டோக்கன் வழங்கப்படவுள்ளது. வருகிற ஆக. 1 ஆம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், அந்த டோக்கன் வரிசை எண்களின் அடிப்படையில் அவர்களின் முறை ஒதுக்கப்பட்டு, பயணச்சீட்டுகள் தடையின்றி முன்பதிவு செய்யப்படும். இதன்மூலம், ரயில் நிலையக் கவுண்டர்களில் ஏற்படும் தள்ளுமுள்ளு மற்றும் நீண்ட வரிசைகளால் பயணிகள் சந்திக்கும் சிரமங்கள் ஓரளவுக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய விதிமுறைகளின்படி, ஏசி வகுப்பு தத்கல் டிக்கெட்டுகளுக்கு டோக்கன்கள் காலை 8.30 மணி முதல் 9.00 மணி வரையிலும், ஏசி அல்லாத வகுப்புகளுக்கான டோக்கன்கள் காலை 9.00 மணி முதல் 9.30 மணி வரையிலும் வழங்கப்படவுள்ளது. அதனைத்தொடர்ந்து ஏசி தத்கல் முன்பதிவு காலை 10 மணிக்கும், ஏசி அல்லாத தத்கல் முன்பதிவு காலை 11 மணிக்கும் வழக்கம்போல் தொடங்கும்.

முதலில், ஒரு கவுண்டருக்கு 10 ஏசி ரயில்கள் மற்றும் 15 ஏசி அல்லாத ரயில்களுக்கான டோக்கன்கள் வழங்கப்படும்; தேவைக்கேற்ப எண்ணிக்கை மாற்றப்படும். குடும்பத்தினருக்கு டிக்கெட் பதிவு செய்வோருக்கு 'ஏ' வகை, மற்றவர்களுக்கு ‘பி’ வகை டோக்கன் வழங்கப்படவுள்ளது.

ஒருவர் வாங்கிய டோக்கனை மற்றொருவருக்கு தர முடியாது. டோக்கன்கள் பயன்படுத்தப்பட்ட பிறகு இருக்கைகள் காலியாக இருந்தால், முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் டிக்கெட் வழங்கப்படும். தத்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு மையங்களில் பெறச் செல்லும் பயணிகள், ஆதார் அட்டை அல்லது பிற புகைப்பட அடையாள அட்டை கட்டாயம் வைத்திருப்பதை உறுதிசெய்து கொள்ளவும். இந்த புதிய டோக்கன் நடைமுறையானது முதற்கட்டமாக மேற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Summary

Indian Railways will introduce a token-based system for Tatkal bookings at reservation counters, aiming to reduce queues, improve crowd management, and streamline ticket booking with separate provisions for family reservations.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.