ரயில் டிக்கெட் முன்பதிவை வேகமாகவும் எளிமையாகவும் மேற்கொள்ள புதிய இணையதளத்தை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தவுள்ளது.
ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது சமீப காலங்களில் மிகவும் மோசமான அனுபவமாக உள்ளதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.
இளம் பயணிகள் பலரின் குற்றச்சாட்டுகள் மற்றும் கோரிக்கைகளைத் தொடர்ந்து தற்போது புதிய ஐஆர்சிடிசி இணையதளம் அறிமுகப்படுத்தும் பணிகளை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது.
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் ரயில்வே துறையின் இணையதளமான ஐஆர்சிடிசி தளத்தில் அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில், இதுபோன்ற கோளாறுகள் ஏற்படாத வகையில் புதிய இணையதளம் ஒன்றை இந்திய ரயில்வே வருகிற ஜூன் 15 அன்று அறிமுகப்படுத்தப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுபற்றி ரயில்வே அதிகாரி ஒருவர் பேசுகையில், ”புதுப்பிக்கப்பட்ட ஐஆர்சிடிசி இணையதளம் தொடர்பான பணிகள் சீராக நடைபெற்று வருகின்றது. மேம்படுத்தப்பட்ட அம்சங்கள், பயன்படுத்த எளிமையான வடிவமைப்பு மற்றும் கணிசமான வேகத்தில் டிக்கெட் முன்பதிவு வசதிகளை புதிய இணையதளம் வழங்கும்” என்று தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, புதிய மேம்படுத்தப்பட்ட இணையதளம் ஒரு நிமிடத்திற்குக் குறைந்தது 1.5 லட்சம் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுகளைக் கையாளும் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், விரைவான சரிபார்ப்பு வசதி கொண்டுள்ளதால் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வது எளிதாக இருக்கும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
Summary
IRCTC is set to launch a new website to make train ticket booking faster and easier.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணமா? இனி ரூ. 500 அபராதம்!

ஜூலை 15-க்குள் மேம்படுத்தப்பட்ட புதிய ஐஆர்சிடிசி இணையதளம்! அஸ்வினி வைஷ்ணவ் உறுதி

தட்கல் முன்பதிவில் ஏற்படும் சிக்கல்கள்: கண்டுகொள்ளுமா ரயில்வே?
கிரிக்கெட் ரசிகர்கள் கவனிக்க... ஐபிஎல் ப்ளே-ஆஃப் போட்டி டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்!
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |





