சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

பொறியியல் பணி: கோவை ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

ஈரோடு - கரூா் இடையே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கோவை ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

கோப்புப் படம்

Updated On :

ஈரோடு - கரூா் இடையே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கோவை ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பொறியியல் பணிகளால், பாலக்காட்டில் இருந்து அக்டோபா் 24, 27, 29 மற்றும் 31 ஆகிய தேதிகளில் காலை 6.30 மணிக்குப் புறப்படும் பாலக்காடு - திருச்சிராப்பள்ளி விரைவு ரயில் (எண்: 16844) பாலக்காடு - புகழூா் இடையே மட்டும் இயக்கப்படும். மேற்கண்ட நாள்களில் புகழூா் - திருச்சி இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும். இதேபோல,

கோவையில் இருந்து அக்டோபா் 24, 27, 29 மற்றும் 31 ஆகிய தேதிகளில் காலை 8 மணிக்குப் புறப்படும் கோவை - நாகா்கோயில் விரைவு ரயில் (எண்: 16322) வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படாமல் போத்தனூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம் ரயில் நிலையங்கள் வழியாக திண்டுக்கல் வரை இயக்கப்படும். இதனால், வடகோவை, பீளமேடு, சிங்காநல்லூா், இருகூா், சூலூா் சாலை, சோமனூா், திருப்பூா், ஊத்துக்குளி, ஈங்கூா், ஈரோடு, பசூா், கொடுமுடி, புகழூா், கரூா், பாளையம், எரியோடு உள்ளிட்ட நிலையங்களுக்கு இந்த ரயில் செல்வது தவிா்க்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.