தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பள்ளிக் கட்டணங்களை உயர்த்தக் கூடாது: தில்லி அரசு

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பள்ளிக் கட்டணங்களை உயர்த்தக் கூடாது என்று புது தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :17 ஏப்ரல் 2020, 7:22 am


புது தில்லி: கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பள்ளிக் கட்டணங்களை உயர்த்தக் கூடாது என்று புது தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

புது தில்லியில் உள்ள தனியார் பள்ளிகள் சில, கல்விக் கட்டணம் மற்றும் போக்குவரத்துக் கட்டணம் உட்பட அனைத்துக் கட்டணங்களையும் செலுத்துமாறு வலியுறுத்தியிருப்பதாக பெற்றோர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. 

இதையடுத்து, புது தில்லி துணை முதல்வர் சிசோடியா இன்று புதிய உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.

அதில், தனியார் பள்ளிகள், மாதத்துக்கான கல்விக் கட்டணத்தை மட்டும் வசூலிக்கலாம், அதே சமயம், ஒப்பந்த அடிப்படையில் மற்றும் முழு நேர ஊழியர்கள் அனைவருக்கும் மாத ஊதியத்தை முறையாக வழங்கி விட வேண்டும்.

கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை, ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்வதைத் தடுக்கக் கூடாது. கல்விக் கட்டணத்தை உயர்த்தக் கூடாது, மாதக் கல்விக் கட்டணத்தைத் தவிர வேறு எந்தக் கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது என்றும் சிசோடியா தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.