தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கரோனா பாதிப்பு ஆயிரத்தை எட்டிய மாநிலங்களின் பட்டியலில் 6-வதாக இணைந்த குஜராத்

இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை நிலவரப்படி 14,378 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 11,906 ஆக உள்ளது. இதுவரை 1,991 பேர் குணமடைந்துள்

News image
Updated On :18 ஏப்ரல் 2020, 9:39 am


இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை நிலவரப்படி 14,378 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 11,906 ஆக உள்ளது. இதுவரை 1,991 பேர் குணமடைந்துள்ளனர். 480 பேர் மரணம் அடைந்துவிட்டனர்.

மகாராஷ்டிரம், தில்லி, மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகளைக் கொண்ட மாநிலங்களாக இருந்தன.

தற்போது குஜராத் மாநிலத்திலும் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இன்றைய நிலவரப்படி 1,099 ஆக உயர்ந்துள்ளது. இங்கு 41 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதன் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகளுடன் குஜராத் 6வது மாநிலமாக இணைந்துள்ளது. 

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு மூன்று ஆயிரத்தைத் தொட்டுவிட்ட நிலையில், தில்லியில் கரோனா பாதிப்பு இரண்டு ஆயிரத்தை நெருங்குகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.