இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 17,265-ஆக உயர்வு

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,265-ஆக உயர்ந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 17,265-ஆக உயர்வு

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,265-ஆக உயர்ந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் கரோனா தொற்றின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் 23-ம் தேதியே முதல்கட்டமாக 21 நாள்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும், வைரஸின் தாக்கம் தொடர்ந்து நீடித்து வந்ததால் இரண்டாம் கட்டமாக வரும் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட ஊரடங்கில் இன்று முதல் சில நிபந்தனைகளுடன் தளர்வுகள் இருக்கும் என மத்திய அரசு அறிவித்து அதற்கான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டது.  இந்த நிலையில் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,116-லிருந்து 17,265-ஆக உயர்ந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதேமசயம் பலியானோரின் எண்ணிக்கை 519-லிருந்து 543-ஆக உயர்ந்துள்ளது.  மேலும் கரோனா பாதிப்பில் இருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,302-லிருந்து 2,547-ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிகபட்சமாக, 
மகாராஷ்டிரம் - 4203
தில்லி - 2003
குஜராத் - 1743
ராஜஸ்தான்-1478
தமிழகம் - 1477
ம.பி.,-1407
உ.பி., - 1084
தெலங்கானா-844
ஆந்திரம் - 646
கேரளம்-402
கர்நாடகம்- 390
புதுச்சேரி - 07 பேருக்கு கரோனா ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com