ராஜஸ்தானில் கரோனா பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியது

ராஜஸ்தான் இன்று புதிதாக 44 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 
ராஜஸ்தானில் கரோனா பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியது

ராஜஸ்தான் இன்று புதிதாக 44 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

இந்தியாவில் கரோனா தொற்று பல்வேறு மாநிலங்களில் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், மகாராஷ்டிரம், குஜராத், தில்லியைத் தொடர்ந்து நான்காவதாக கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக ராஜஸ்தான் உள்ளது.

ராஜஸ்தானில் நேற்று வரை பாதிப்பு 1,964 ஆக இருந்த நிலையில் இன்று 44 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,008 ஆகவும்,  உயிரிழப்புகள் 31 ஆகவும் அதிகரித்துள்ளன.

இந்தியாவில் கரோனா பாதிப்பு 23,077 ஆகவும் உயிரிழப்பு 718 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com