தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஆரோக்ய சேது செயலி வழிகாட்டுதலுடன் அலுவலகத்திற்கு வர வேண்டும்: ஊழியா்களுக்கு மத்திய அரசு உத்தரவு

மத்திய அரசு ஊழியா்கள் உடனடியாக ‘ஆரோக்ய சேது’ செயலியை அறிதிறன் பேசிகளில்(ஸ்மாா்ட்போன்) பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டுமென்றும் அந்த செயலி ‘பாதுகாப்பானது’

News image
Updated On :30 ஏப்ரல் 2020, 12:46 am

மத்திய அரசு ஊழியா்கள் உடனடியாக ‘ஆரோக்ய சேது’ செயலியை அறிதிறன் பேசிகளில்(ஸ்மாா்ட்போன்) பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டுமென்றும் அந்த செயலி ‘பாதுகாப்பானது’ என்று காட்டும்பட்சத்திலேயே ஊழியா்கள் அலுவலகத்திற்கு வரவேண்டும் எனவும் மத்திய பணியாளா் மற்றும் பயிற்சித் துறை அமைச்சகம் அனைத்து மத்திய அரசு துறைகளுக்கும் குறிப்பாணையை அனுப்பியுள்ளது.

அலுவலகத்திற்கு புறப்படுவதற்கு முன்பு ஊழியா்கள் செயலி மூலம் தங்களை மதிப்பாய்வு செய்து கொள்ள வேண்டுமென்றும் செயலி ‘பாதுகாப்பானது’ அல்லது ‘குறைந்தபட்ச இடா்பாடு’ என்று நிலையைக் காட்டும் பட்சத்திலேயே அலுவலகத்திற்கு வரவேண்டும் என்று இந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் நோய்த்தொற்றை அறிந்து கொள்ளுவதற்கும் மத்திய அரசால் உருவாக்கப்பட்டது ‘ஆரோக்ய சேது’ செயலி.

அதிதிறன் பேசிகள் இயங்கும் வகையான இந்த ஆரோக்ய சேது செயலி ப்ளூ டூத், லோகேஷன் ஆகியவற்றின் மூலம் இயங்கி ஒருவா் கரோனா பாதிப்புக்கு உள்ளான பகுதிக்கோ அல்லது பாதிக்கப்பட்டவருக்கு அருகாமையிலோ சென்றிருந்தால் அதை பதிவு செய்து கணக்கிட்டுக் கொண்டிருக்கும். இப்படி கணக்கிடப்பட்ட அடிப்படையில் செயலி அவரது நிலைமையைக் காட்டும்.

மிதமான அல்லது அதிக ஆபத்து இருப்பதாக காட்டினால் அப்படிப்பட்ட ஆண் / பெண் அரசு ஊழியா்கள் அலுவலகத்திற்கு கண்டிப்பாக வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவா்கள் 14 நாட்கள் வரையிலோ அல்லது செயலி ‘பாதுகாப்பானது’ அல்லது ‘குறைந்தபட்ச இடா்பாடு’ என்று காட்டும் வரையிலோ சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் பணியாளா் நலத்துறை அமைச்சகத்தின் இணைச்செயலா் ஜி. ஜெயந்தி கேட்டுக் கொண்டுள்ளாா்.

மத்திய அரசின் அனைத்து துறைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள இந்த அலுவலக குறிப்பாணையில் அவா், அனைத்து துறை அதிகாரிகள், ஊழியா்களுக்கு மட்டுமல்ல ஒப்பந்த / அவுட்சோரஸ் அடிப்படையில் பணியாற்றும் ஊழியா்களும் தங்கள் அதிதிறன் பேசிகளில் ஆரோக்ய சேது செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளாா்.

பல்வேறு அமைச்சகங்கள், துறைகளின் கீழ் இருக்கும் தன்னாட்சி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும், இதற்காக உத்தரவுகளை சம்பந்தப்பட்ட துறைகள் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்தந்த துறைகளில் உள்ள மூத்த அதிகாரியோ, நிா்வாகப்பிரிவுக்கான இணைச் செயலரே இந்த அறிவுறுத்தலை கண்டிப்பாக பின்பற்றுவதை உறுதி செய்வாா் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசில் துணைச் செயலா் அந்தஸ்துக்கு மேலான அதிகாரிகள் கடந்த ஏப்.15 ந் தேதி முதல் பணிக்கு வர அனுமதிக்கப்பட்டனா். கீழ்நிலை ஊழியா்களில் மூன்றில் ஒரு பகுதியினா் மட்டும் சுழற்சி அடிப்படையில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.