2020-இல் கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடியது; நிச்சயம் கரோனா இல்லை

இந்த 2020-ஆம் ஆண்டில் இந்தியர்கள் தேடுபொறி வலைத்தளமான கூகுளில் அதிகம் தேடியது எந்த விஷயத்தைப் பற்றி என்ற தகவலை கூகுள் இன்று வெளியிட்டுள்ளது.
2020-இல் கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடியது; நிச்சயம் கரோனா
2020-இல் கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடியது; நிச்சயம் கரோனா


புது தில்லி: இந்த 2020-ஆம் ஆண்டில் இந்தியர்கள் தேடுபொறி வலைத்தளமான கூகுளில் அதிகம் தேடியது எந்த விஷயத்தைப் பற்றி என்ற தகவலை கூகுள் இன்று வெளியிட்டுள்ளது.

பலரும் எளிதாக கரோனா வைரஸ் என்று மனதுக்குள் நினைத்திருக்கலாம். ஆனால் அது சரியல்ல. ஒரு துப்பு வேண்டுமா? கடந்த ஆண்டு கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடியது ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை.

இந்தியர்கள் பெரும்பாலும் கிரிக்கெட் பிரியர்கள். தற்போது ஐபிஎல் போட்டிகள் மூலம் மீண்டும் அது நிரூபிக்கப்பட்டுள்ளது.  ஏனெனில் 2020-ஆம் ஆண்டில் இந்தியர்கள் அதிகம் தேடிய வார்த்தை கரோனா தொற்றையும் தாண்டி ஐபிஎல் என்பதுதான்.

செய்தி மற்றும் விளையாட்டில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக ஐபிஎல் அமைந்துள்ளது. அதற்கடுத்த இடத்தில்தான் கரோனா வைரஸ், அமெரிக்க அதிபர் தேர்தல், பிரதமரின் விவசாயிகள் திட்டம், பிகார் தேர்தல் முடிவு மற்றும் தில்லி தேர்தல் முடிவு ஆகியவை கூகுளில் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக 13வது ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு நாட்டில் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடைபெற்றது. 

கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியலில் அமெரிக்க அதிபர் - தேர்வு ஜோ பைடன், அர்னாப் கோஸ்வாமி,  கனிகா கபூர், கிம் ஜோங் உன், அமிதாப் பச்சான் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். 

அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் வரிசையில் மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த தில் பெசாரா படத்தைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா நடத்த சூரரைப் போற்று திரைப்படம் இடம்பெற்றுள்ளது.

எப்படி என்ற வார்த்தையுடன் தொடங்கும் கேள்விப் பட்டியலில் பனீர் செய்வது எப்படி? நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி?, பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி என்ற கேள்விகள் இடம்பெற்றுள்ளன.

என்ன என்ற வார்த்தையுடன் தொடங்கும் கேள்விப் பட்டியலில் கரோனா வைரஸ் என்றால் என்ன?, கோவிட்-19 என்றால் என்ன? பிளாஸ்மா தெரபி என்றால் என்ன, சிஏஏ என்றால் என்ன என்ற கேள்விகள் இடம்பிடித்துள்ளன.

எனக்கு அருகில் என்ற வசதியைப் பயன்படுத்து பெரும்பாலான இந்தியர்கள், எனக்கு அருகில் இருக்கும் உணவகங்கள், கரோனா பரிசோதனை மையங்கள், பட்டாசு கடைகள், மதுபானக் கடைகள், இரவு தங்கும் விடுதிகள் போன்றவற்றை தேடியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com