
தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் சமீபத்திய தரவுகளின்படி பிகார், மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் 40 சதவிகித பெண்கள் 18 வயது ஆவதற்கு முன்பே திருமணமாகியிருப்பது தெரியவந்துள்ளது.
15-19 வயதுக்கிடையிலான பெண்களிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு: | |
மாநிலம் | கணக்கெடுப்பின்போது தாயாக அல்லது கர்ப்பிணியாக உள்ளவர்கள் விகிதம் |
ஆந்திரப் பிரதேசம் | 12.6 சதவிகிதம் |
அசாம் | 11.7 சதவிகிதம் |
பிகார் | 11 சதவிகிதம் |
திரிபுரா | 21.9 சதவிகிதம் |
மேற்கு வங்கம் | 16.4 சதவிகிதம் |
20-24 வயதுக்கிடையிலான பெண்களிடம் நடத்தப்பட்ட கணக்கெடுக்கப்பு: | |
மாநிலம் | 18 வயது ஆவதற்கு முன்பே திருமணமான பெண்கள் விகிதம் |
பிகார் | 40.8 சதவிகிதம் |
திரிபுரா | 40.1 சதவிகிதம் |
மேற்கு வங்கம் | 41.6 சதவிகிதம் |
அசாம் | 31.8 சதவிகிதம் |
ஆந்திரப் பிரதேசம் | 29.3 சதவிகிதம் |
குஜராத் | 21.8 சதவிகிதம் |
கர்நாடகம் | 21.3 சதவிகிதம் |
மகாராஷ்டிரம் | 21.9 சதவிகிதம் |
தெலங்கானா | 23.5 சதவிகிதம் |
25 -29 வயதுக்கிடையிலான ஆண்களிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு: | |
மாநிலம் | 21 வயது ஆவதற்கு முன்பே திருமணமான பெண்கள் விகிதம் |
அசாம் | 21.8 சதவிகிதம் |
பிகார் | 30.5 சதவிகிதம் |
குஜராத் | 27.7 சதவிகிதம் |
திரிபுரா | 20.4 சதவிகிதம் |
மேற்கு வங்கம் | 20 சதவிகிதம் |
லடாக் | 20.2 சதவிகிதம் |
அசாம், பிகார், மணிப்பூர், மேகாலயா, சிக்கிம், திரிபுரா, ஆந்திரப் பிரதேசம், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், குஜராத், ஹிமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், லடாக், கர்நாடகம், கோவா, மகாராஷ்டிரம், தெலங்கானா, மேற்கு வங்கம், மிசோரம், கேரளம் உள்ளிட்ட 17 மாநிலங்கள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்களில் மட்டுமே இந்தக் கணக்கெடுப்பு முதற்கட்டமாக நடத்தப்பட்டுள்ளது. 2-ம் கட்டமாக மீதமுள்ள மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு வெளியிடப்படவுள்ளது.
பெண்களின் திருமண வயது -18, ஆண்களின் திருமண வயது -21. இப்படி இருக்கையில் இந்த தரவுகள் இந்தியாவின் நிலையை வெளிப்படுத்துகிறது.