ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ஆம்புலன்ஸ் வசதி: எடியூரப்பா

கர்நாடக மாநிலத்தில் சுகாதார சேவையை மேம்படுத்தும் வகையில் அனைத்து கிராம சுகாதார நிலையங்களிலும் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வர் எடியூரப்பா  (கோப்புப்படம்)
கர்நாடக முதல்வர் எடியூரப்பா (கோப்புப்படம்)

கர்நாடக மாநிலத்தில் சுகாதார சேவையை மேம்படுத்தும் வகையில் அனைத்து கிராம சுகாதார நிலையங்களிலும் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

நாட்டில் சிறந்த சுகாதார சேவைகளை வழங்கும் மாநிலம் என்ற இலக்கை எட்டும்வகையில் துணை சுகாதார மையங்கள் மற்றும் மூன்றாம் நிலை சுகாதார மையங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதில் இலவசமாக சிகிச்சையளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆலோசனையில் பங்கேற்று மேலும் செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் சுகாதர் வழங்கிய காணொலி விளக்கத்தை முதல்வர் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடியூரப்பா, சிறந்த சுகாதார சேவையை வழங்கும் வகையில் கர்நாடக மாநிலத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 24 மணிநேரம் செயல்படக்கூடிய வகையில் ஆம்புலன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

மருத்துவப் படிப்பு முடித்து புதிதாக வெளிவந்த மருத்துவர்கள் கிராமப்புறப் பகுதிகளில் சேவையாற்றும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேம்பட்ட சிகிச்சை அளிப்பதால், தாலுகா மற்றும் மாவட்டத் தலைமை மருத்துவமனைகளுக்கு மக்கள் செல்லவேண்டிய அவசியம் ஏற்படாது என்று கூறினார்.

30 ஆயிரம் பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் என்ற கணக்கில், மாநிலம் முழுவதும் 2,380 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ஆறு படுக்கைகள் உள்ளன. இவை அந்த பகுதிகளுக்கு ஏற்ப 12 முதல் 20 படுக்கைகளாக அதிகரிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுகாதர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com