மோடியின் பட்ஜெட் ஆலோசனை எல்லாம் கோடீஸ்வர நண்பர்களுக்காகவே: ராகுல் காட்டம்

நாட்டின் நிதிநிலை அறிக்கை குறித்து பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி நடத்தி வரும் ஆலோசனைகள் குறித்து கடுமையாக விமரிசித்திருக்கிறார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
மோடியின் பட்ஜெட் ஆலோசனை எல்லாம் கோடீஸ்வர நண்பர்களுக்காகவே: ராகுல் காட்டம்
Updated on
1 min read


புது தில்லி: நாட்டின் நிதிநிலை அறிக்கை குறித்து பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி நடத்தி வரும் ஆலோசனைகள் குறித்து கடுமையாக விமரிசித்திருக்கிறார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி.

இது பற்றி அவர் கூறுகையில், நிதிநிலை அறிக்கை தயாரிப்பது குறித்து பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நடத்தும் ஆலோசனைகள் எல்லாம் அவரது கோடீஸ்வர நண்பர்களுக்காகத்தானே தவிர, விவசாயிகளுக்காகவோ, மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் நடுத்தர மக்களுக்காகவோ அல்ல என்று ராகுல் கூறியுள்ளார்.

நாட்டின் பொருளாதார வளா்ச்சி கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவீதமாகச் சரியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ளாா்.

இந்தச் சூழலில், மத்திய பட்ஜெட் தொடா்பாக, பல்வேறு துறைகளைச் சோ்ந்தவா்களை பிரதமா் நரேந்திர மோடி பல கட்டங்களாகச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறாா்.

அதன்படி, நாட்டின் முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைவா்களை அவா் கடந்த திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா். அவா்களுடன் நாட்டின் பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிப்பதற்கான வழிமுறைகள், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான வழிமுறைகள் குறித்து மோடி ஆலோசனை நடத்தினாா்.

இந்த நிலையில்தான், ராகுல் காந்தி இந்த விமரிசனத்தை முன்வைத்துள்ளார்.

மேலும் விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் சிறு தொழில் முனைவோர்களின் கருத்துகளையோ, குரல்களையோ கேட்க பிரதமர் மோடிக்கு விருப்பம் இல்லை என்றும் ராகுல் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com