
லடாக் பயணம்: சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் மோடி
லடாக்கில் இந்திய - சீன ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்து லே பகுதியில் உள்ள ராணுவ மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் வீரர்களை பிரதமர் மோடி இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
லடாக் எல்லையான் கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15-ம் தேதி இந்திய - சீன ராணுவத்தினரிடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 70-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர்.
இந்த நிலையில், லடாக் பகுதியில் ராணுவ நிலைகளை நேரில் சந்தித்து ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி, முப்படைகளுக்கான தலைமை தளபதிமற்றும் ராணுவத் தலைமைத் தளபதிகளுடன் இன்று லடாக் பகுதிக்கு வருகை தந்தார்.
அப்போது, லே பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.