கரோனா தொற்றுக்கு பலியாவோர் விகிதம் இந்தியாவை விட குஜராத்தில் அதிகம்

இந்தியாவில் கரோனாவுக்கு பலியாவோர் விகிதம் 2.23% ஆக இருக்கும் நிலையில், நாட்டிலேயே கரோனா பலியில் குஜராத் மாநிலம் 4.09% ஆக உள்ளது.
கரோனா தொற்றுக்கு பலியாவோர் விகிதம் இந்தியாவை விட குஜராத்தில் அதிகம்
கரோனா தொற்றுக்கு பலியாவோர் விகிதம் இந்தியாவை விட குஜராத்தில் அதிகம்

இந்தியாவில் கரோனாவுக்கு பலியாவோர் விகிதம் 2.23% ஆக இருக்கும் நிலையில், நாட்டிலேயே கரோனா பலியில் குஜராத் மாநிலம் 4.09% ஆக உள்ளது.

இந்தியா போன்ற அதிக மக்கள் தொகைக் கொண்ட ஒரு நாட்டில் கரோனா பேரிடரை சமாளிப்பது தொடர்பாக எடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கைகளில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. 

இந்த நிலையில், மருத்துவத் துறையில் பின்தங்கியிருக்கும் குஜராத்தில் கரோனா பாதித்து சிகிச்சை பெறும் நோயாளிகளில் மரணம் அடைவோர் விகிதம் பிற வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களை ஒப்பிடுகையில் மிக அதிகமாக உள்ளது.

குஜராத்தில் கரோனாவுக்கு பலியாவோர் விகிதம் 4.09% ஆக உள்ளது. மறுபக்கம் நாட்டில் கரோனாவுக்கு பலியாவோர் விகிதம் 2.23% ஆக உள்ளது. நாட்டிலேயே அதிக கரோனா பாதிப்பைக் கொண்டிருக்கும் மகாராஷ்டிரத்தில் கூட இது 3.6% ஆகவே உள்ளது. தமிழகத்தில் முதலில் இருந்தே இது மிக மிகக் குறைவாக 1.6% ஆக உள்ளது.

குஜராத்தில் மட்டும் இதுவரை கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,372 ஆக உள்ளது. இது பலி எண்ணிக்கைப் பட்டியலில் மகாராஷ்டிரம், தில்லி, தமிழ்நாடு மாநிலங்களை அடுத்து 4வது இடமாகும். ஆனால், இந்த மாநிலங்களில் குஜராத்தை விட கரோனா பாதிப்பு மிக அதிகம்.

இதற்குக் காரணம், மேற்கத்திய மாநிலங்களில் கரோனா நோயாளிகளை தாமதமாகக் கண்டறிதல், மிகக் குறைவான பரிசோதனை, இதர நோய் பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் போன்ற பட்டியலிடப்படுகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com